அது போல பதிவர் "தருமி" அவர்களும் இது குறித்து மிகுந்த வேண்டுதலோடு ஒரு நேர்மையான அதிகாரியின் நேர்மையை பாராட்டி அவருக்கு துணை நிற்பதோடு அல்லாமல் அரசுக்கும் தங்களின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டி இருந்தார்.
தற்போது அரசு இந்த நிகழ்வு குறித்து கருத்து கூறும் அளவுக்கு மக்களை இந்த நிகழ்வு சென்று அடைந்திருக்கிறது என்பதை அரசு உணர்ந்தே இறங்கி வந்து கருத்து சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே இறங்கி வரும் செலவாக்கை எப்பாடு பட்டாவது தூக்கி நிறுத்த பல தகிடு தத்த வேலைகளை எடுத்து வரும் அதே வேளையில் கலைஞர் அரசின் இத்தகைய நடவடிக்கை எளிதில் யாரும் மறந்து விட இயலாது.
திரு. உமாசங்கர் அவர்களின் துறை சார்ந்த பணிகள் குறித்து அவர் பணிசெய்த இடங்களில் பணியில் தடையாக இருந்த பல அதிகாரிகளை அவர் தயவு காட்டாமல் நடவடிக்கை எடுத்திருக்கிறார். வாங்கும் சம்பளம் மக்களின் வியர்வையிலிருந்து வருவது என்பதை உணர்ந்து தான் பணியை ஆர்வத்துடன் செய்தவர் என்பதை நம்மில் பலரும் அறிவோம்.
இந்த நேரத்தில் பதிவுலகம் சாதி , மத பேதங்களை கடந்து நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என் போன்றவர்களுடைய வேண்டுகோள்.
அதே சமயம் ஊழலில் ஊறித்திளைக்கும் எத்தனையோ அரசு அதிகாரிகள் இன்னும் இன்னும் என்று வாரி சுருட்டும் வேலைகளில் வேகமாக நடைபோடுவதையும் நாம் அறியாததல்ல. அவர்களின் சாமரவீச்சில் சரிந்து கிடப்பவர் என்று தான் நிமிர்ந்து எழுவாரோ தெரியவில்லை.
கலைஞர் எதிர் காட்சியாயிருக்கும் போது ஆளும் கட்சியை காட்டமாக தாக்கி அறிக்கை விடுவது நாம் அறியாததல்ல. அதுவே ஆளும் கட்சியாகி விட்டால் ஏன்? ஏன்? இப்படி.
இது தொடரும் .... இது முடிவல்ல ... என்பது நமக்கு தெரியும் ஏன் என்றால் ஆட்சி மாற்றம் என்பது வந்தே தீரும் அது மறு படியும் "ஜெயா மாமி" யாக இருக்க கூடாது. வந்தால்! அது மறுபடியும் தமிழகத்திற்கு சகோதரி "தாமரை" சொன்னது போல "அமாவாசை" தான்.
பொற்கோ