புதன், 13 ஜனவரி, 2010
தமிழர் திரு நாள் (2010) ?!
" பொங்கல் திருநாள் " தமிழரின் மனமெல்லாம் பொங்கும் பெருநாள் என்று தமிழறிஞர் "பாவலரேறு பெருஞ்சித்திரனார்" அவர்கள் தமிழர்களின் வாழ்வியல் சார்புகள் குறித்து தாம் பங்கு பெரும் நிகழ்வுகளில் பேசும் பொழுது அடிக்கடி குறிப்பிடுவார்கள்.
திருநாள் என்றால் அந்த நாளுக்கென்று ஒரு சிறப்பு இருக்கும் அதனால் தான் அந்த சிறந்த நாளை திருநாள் என்று சொல்கிறோம்.
ஒரு திருநாளை மக்கள் கொண்டாடி மகிழ அவர்கள் சமூகத்திலும், குடும்பத்திலும் இணைந்து வாழ்கிறபோது தான் அந்த திருநாள் பெருமை படுத்தப்படும்.
இன்றைய சூழ்நிலையில் தமிழ் சமுகம் கொண்டாடி மகிழும் சமுக சூழல் இருக்கிறதா? என்றால்..........! இல்லை.
சில நிகழ்ச்சிகள் ஏதோ தானே நடப்பது போல தோன்றினாலும் அவைகளெல்லாம் தமிழரின் உணர்வுகளை (அமுக்கி) மழுங்கடிக்க வைக்கும் நிகழ்ச்சிகளாகவே நடந்து வருகிறது. தமிழனின் உணர்வுகளை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காகவே அவனுடைய சிந்தனையை ஒருமுகப்படுத்தாத படிக்கு தேர்தல்களும், அதன் முலமாக ஒன்றாய் அணிதிரள வேண்டிய இனம் தன தலைவன் மற்றும் தலைவியிடம் தெண்டனிட்டு கிடக்கிறது.
தேர்தல் செலவுக்கு வரலாறு காணாத அளவுக்கு பணத்தை தண்ணீராக இரைக்கிறார்கள் என்று எட்டு திக்கும் சிரிப்பாய் சிரிக்கிறது.
தமிழகத்தின் இன்றைய ஆட்டவும் , அசைக்கவும் முடியாத முதல்வர் அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் உலகதமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளையும், முதல்வரின் மகள் கனிமொழி குழுவினர் நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியையும் நிறுத்தி வைத்து உலக தமிழினம் கவலையோடும், கண்ணீரோடும் நிற்கும் மக்களின் கண்களில் வழிந்தோடும் கண்ணீரை துடைக்கவும், அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டு ஆறுதல் சொல்லவும் தமிழ் சமுகத்தை வழிநடத்தும் ஒரு பெரும் பொறுப்பை காணா நிலையில் இருப்பதும் அது பற்றிய எந்த உணர்வுமற்ற நிலையில் தமிழம் இருக்குமென்றால் நாளை தமிழினம் பற்றிய கவலை அற்றவர்களாகவே நாம் நிறுத்தப்படுவோம்.
மேற்சொன்ன இரண்டு நிகழ்ச்சிகளையும் இந்த ஆண்டு நிறுத்தி வைத்து , தமிழக தமிழர்களின் ஈழ ஆதரவு நிலையில், சென்னை சங்கமத்தின் உணர்வுகளையும், தமிழக அரசின் உணர்வுகளையும் தெரிவித்திருந்தால், இந்த தமிழ் புத்தாண்டு பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் சொன்னது போல உலகமெங்கும் சிதறி கிடக்கும் தமிழர் மனமெல்லாம் பொங்கும் பெருவிழாவாக இத்திருநாள் அமைந்திருக்கும். பொறுப்புள்ள தமிழர் சிந்திப்பர்!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக