சனி, 16 ஜனவரி, 2010

நாடாளுமன்றத்தில் திருமா!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோழர்தொல்.திருமாவளவன் அவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக தமிழ் சமுக அரசியல் களப்பணி ஆற்றி வரும் ஒரு ஆற்றல்மிக்க இளைஞர்.

தமிழகத்தின் இளம் அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். பெரும்பாலான தலைவர்களால் பாராட்டு பெற்றவர். தான் அரசியல் பணியின் மூலம் ஏராளமான போராட்டங்களை நடத்தியவர்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் சாத்திய ஒடுக்குமுறைக்கு எதிராக போரடி பல வகையிலும் மக்கள் அமைதியாக வாழ துணை நின்றவர். அநீதிக்கெதிராக சமரசமற்ற போராட்டங்களை நடத்தியவர்.

தமிழ் இன உணர்வாளர்கள் பலர் தேர்தல் கூட்டணி தயக்கங்களை மறந்து வாழ்த்தவேண்டும்.

பலர் நேரிலும்,தொலைபேசியிலும் வாழ்த்தியிருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தான் இன்னும் தானும் வாழ்த்தாமல் தன கட்சிக்காரர்களையும் வாழ்த்துவதற்கு வழிவிடாமல் இருக்கிறார். என்ன இருந்தாலும் திருமா என் இன்னொரு மகனை போன்றவர் என் வீட்டுக்கு எப்பொழுதும் வரலாம் போகலாம் என்றார்.

ஆனால் இன்று வரை வாய் திறவாமல் இருக்கிறார். அய்யா! இது தான் தாங்கள் என் போன்ற அடுத்த தலைமுறைக்கு காட்டும் வழியா? பாடமா? புரியவில்லை! பாமக விடம் மாற்றம் வேண்டும் என் போன்ற தமிழர்கள் எதிர்பார்க்கிறோம்.

கலவர மாவட்டமாக இருந்த வடக்கு மாவட்டங்களில் பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் இணக்கமான சூழ்நிலை எப்படி கலவரத்திற்கு முடிவுரை எழுதியதோ, அதே போன்று இன்றைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இணைந்து செயலாற்றினால் அது தமிழகத்தின் பொன்னேடுகளில் பொரிக்கப்பெரும்

ஏனென்றால்,
இன்றைய நிலையில் பாராளுமன்றத்தில் இன உணர்வோடு ஈழ தமிழரின் அவல நிலை குறித்து பேச வேண்டும் என்றால் தோழர் மட்டும் தான் உண்டு அதில் மாற்றுகருத்து இருக்க வாய்ப்பில்லை. எந்த தடுமாற்றமும், எந்த வகையான நிர்பந்தமும் இல்லாதவர். அதே நேரத்தில் இனம் பாதிக்கப்படும் துயரமான இந்த கால கட்டத்தில் துணிச்சலாக டெல்லிக்கு எதிராக கருத்துகளை பரப்பி வருகிறார்.

இது தான் இன்றைய தேவை. காலம் அறிந்து செய்யப்படும் தோழரின் நல்ல முயற்சிக்கு அனைவரும் துணைநிற்போம். அப்படி துணை நிற்பதை கடமையாய் கொள்வோம். வாருங்கள் தமிழின சொந்தங்களே.........!
Posted by Picasa

புதன், 13 ஜனவரி, 2010

தமிழர் திரு நாள் (2010) ?!


" பொங்கல் திருநாள் " தமிழரின் மனமெல்லாம் பொங்கும் பெருநாள் என்று தமிழறிஞர் "பாவலரேறு பெருஞ்சித்திரனார்" அவர்கள் தமிழர்களின் வாழ்வியல் சார்புகள் குறித்து தாம் பங்கு பெரும் நிகழ்வுகளில் பேசும் பொழுது அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

திருநாள் என்றால் அந்த நாளுக்கென்று ஒரு சிறப்பு இருக்கும் அதனால் தான் அந்த சிறந்த நாளை திருநாள் என்று சொல்கிறோம்.

ஒரு திருநாளை மக்கள் கொண்டாடி மகிழ அவர்கள் சமூகத்திலும், குடும்பத்திலும் இணைந்து வாழ்கிறபோது தான் அந்த திருநாள் பெருமை படுத்தப்படும்.

இன்றைய சூழ்நிலையில் தமிழ் சமுகம் கொண்டாடி மகிழும் சமுக சூழல் இருக்கிறதா? என்றால்..........! இல்லை.

சில நிகழ்ச்சிகள் ஏதோ தானே நடப்பது போல தோன்றினாலும் அவைகளெல்லாம் தமிழரின் உணர்வுகளை (அமுக்கி) மழுங்கடிக்க வைக்கும் நிகழ்ச்சிகளாகவே நடந்து வருகிறது. தமிழனின் உணர்வுகளை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காகவே அவனுடைய சிந்தனையை ஒருமுகப்படுத்தாத படிக்கு தேர்தல்களும், அதன் முலமாக ஒன்றாய் அணிதிரள வேண்டிய இனம் தன தலைவன் மற்றும் தலைவியிடம் தெண்டனிட்டு கிடக்கிறது.

தேர்தல் செலவுக்கு வரலாறு காணாத அளவுக்கு பணத்தை தண்ணீராக இரைக்கிறார்கள் என்று எட்டு திக்கும் சிரிப்பாய் சிரிக்கிறது.

தமிழகத்தின் இன்றைய ஆட்டவும் , அசைக்கவும் முடியாத முதல்வர் அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் உலகதமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளையும், முதல்வரின் மகள் கனிமொழி குழுவினர் நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியையும் நிறுத்தி வைத்து உலக தமிழினம் கவலையோடும், கண்ணீரோடும் நிற்கும் மக்களின் கண்களில் வழிந்தோடும் கண்ணீரை துடைக்கவும், அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டு ஆறுதல் சொல்லவும் தமிழ் சமுகத்தை வழிநடத்தும் ஒரு பெரும் பொறுப்பை காணா நிலையில் இருப்பதும் அது பற்றிய எந்த உணர்வுமற்ற நிலையில் தமிழம் இருக்குமென்றால் நாளை தமிழினம் பற்றிய கவலை அற்றவர்களாகவே நாம் நிறுத்தப்படுவோம்.

மேற்சொன்ன இரண்டு நிகழ்ச்சிகளையும் இந்த ஆண்டு நிறுத்தி வைத்து , தமிழக தமிழர்களின் ஈழ ஆதரவு நிலையில், சென்னை சங்கமத்தின் உணர்வுகளையும், தமிழக அரசின் உணர்வுகளையும் தெரிவித்திருந்தால், இந்த தமிழ் புத்தாண்டு பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் சொன்னது போல உலகமெங்கும் சிதறி கிடக்கும் தமிழர் மனமெல்லாம் பொங்கும் பெருவிழாவாக இத்திருநாள் அமைந்திருக்கும். பொறுப்புள்ள தமிழர் சிந்திப்பர்!!!